உடுமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும், பி.ஏ.பி பகிர்மான கால்வாய்கள் கடை மடை வரை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மேற்கு மாவட்டம் உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.



நிகழ்வில் மாநில உழவர் பேரியக்கம் துணைச் செயலாளர் பொன்ரமேஷ் கலந்துகொண்டு சிறப்பு ஊரை ஆற்றினார். உடுமலை மடத்துக்குளம் பகுதியில் மும்முனை மின்சாரம் இல்லாததால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து வருவதால் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் மற்றும் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும், பி.ஏ.பி பகிர்மான கால்வாய்கள் கடை மடை வரை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும், தனியார் உரக்கடைகளில் வாங்கபடும் விதைகள் முளைப்புத் திறன் இல்லாமல் இருப்பதால் விதை சான்று அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட உழவர் பேரியக்கம் தலைவர் திருமுருகன், ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், பாமக நிர்வாகிகள் சரவணன், சவுந்தர்ராஜ், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...