சிங்காநல்லூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

பாஜக மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்த விழாவில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


கோவை: சிங்காநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் (03.01.2024) அன்று பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் கோவை பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார் அவர்கள், மாநில விவசாய அணி தலைவர் கோவை பாராளுமன்ற இணை பொறுப்பாளர் ஜிகே.நாகராஜ் அவர்கள் தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் அவர்கள் மற்றும் மண்டல், வார்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மாபெரும் வெற்றியடைய களப்பணி ஆற்றும் வகையில் இந்த அலுவலகம் செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...