கோவையில் அன்னதானம் உண்ண வரும் பக்தர்களிடம் அநாகரியமாக பேசும் பெண் பணியாளர்கள்

கோவிலில் அன்னதானம் சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது என பெண் பணியாளர் பாக்கியலட்சுமி கூறியது மட்டுமின்றி, கேள்வி எழுப்பிய சக பக்தர்களிடம் திமிராக நடந்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு ரத்தனகிரி மருதாச்சல கோவிலுக்கு கடந்த 31ம் தேதி சென்றுள்ளார். அப்போது அக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பணியாளர்கள் சரிவர பணியாற்றாமலும், பக்தர்களுக்கு உணவளிக்காமலும், கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோவில் இயக்குனருக்கு ராஜேஷ் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் அமர்ந்து கொண்டிருக்கையில் அன்னதானத்திற்கு அங்கிருந்த ஒருவர் அழைத்ததாகவும், பின்னர் அன்னதான கூடத்திற்கு சென்று பார்க்கையில் தினம்தோறும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலகை இருந்தாகவும், ஆனால் அங்கு பணிபுரியும் பாக்கியலட்சுமி, ரத்தினம் என்ற இரண்டு பெண்கள் பக்தர்களுக்கு முறையாக உணவு பரிமாறாமல், அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

மேலும் அன்னதானம் சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது என பாக்கியலட்சுமி கூறியதாகவும் இது குறித்து சக பக்தர்கள் கேள்வி எழுப்பும் போது அவர்களிடமும் திமிராக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனை ராஜேஷ் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்து செயல் அலுவலர்க்கு ஆதாரமாக அளித்துள்ளார்.

இந்த புகாரை பெற்று கொண்ட செயல் அலுவலர் இரண்டு பெண்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...