கோவையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் - போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

விடுமுறை தினங்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தினமும் காலையும், மாலையும் நவ இந்தியா சிக்னல் தொடங்கி ஹோப்காலேஜ் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அளவிற்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


கோவை: கோவை-அவினாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,621.30 கோடியில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த மேம்பாலம், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைகிறது.

பெட்டி வடிவ கர்டர் தயாரிக்கப்பட்டு, செக்மென்ட் தொழில் நுட்ப முறையில், ஓடுதளம் அமைக்கப்படுகிறது. மேலும், 10½ மீட்டர் அகலத்தில் ரோட்டின் இருபுறமும், சர்வீஸ் ரோடும், ஒன்றரை மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகாலுடன் நடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., ஆஸ்பத்திரி, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி. கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய 5 பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க மற்றும் உயர்மட்ட நடைபாதை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேம்பால பயணத்தின் போது இறங்கி ஏறும் வகையில் சாய்தளமும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கோவை மாநகர போலீசார் அவினாசி சாலை உட்பட கோவையின் பல்வேறு சாலைகளிலும் 'யு' டர்ன் முறையை அமல்படுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விடுமுறை தினங்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தினமும் காலையும், மாலையும் நவ இந்தியா சிக்னல் தொடங்கி ஹோப்காலேஜ் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அளவிற்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மேம்பால பணிகளின் வேகம் பகுதியளவுக்கு மேல் குறைந்துவிட்டது. மேம்பால பணிகள் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பணியில் தொய்வு காரணமாக பாலம் கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஆமை வேகத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...