ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவையில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம்

காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.


கோவை: தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, உடனடியாக பணி நியமன நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரியில் இன்று காலை 12 மணி அளவில் கையெழுத்து இயக்கம் கோவை மாவட்ட கிளை சார்பில் நடைபெற்றது.



இதில் மாணவ , மாணவிகள் பலர் கையெழுத்திட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...