சிங்காநல்லூர் அருகே திருமண மண்டபத்தில் 5 சவரன் நகை திருடியவர் கைது

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திருமண மண்டபத்தில் நகை திருட்டில் ஈடுபட்டது இவர்தான் என்பது உறுதியானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கடந்த மாதம் 8 ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் மர்ம நபர் ஒருவர் 5 சவரன் நகையை திருடியதாக திருமண வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் கோவை சிங்காநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை கைப்பற்றி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திருமண மண்டபத்தில் நகை திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

மேலும் விசாரணையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற மணி என்பதும் கோவை பீளமேடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் போலிசார் நடத்திய தொடர் விசாரணையில் அடகு வைப்பதற்க்காக வைத்திருந்த திருடப்பட்ட 5 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...