உடுமலை பகுதியில் பொங்கலை முன்னிட்டு மண் பானை உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரம்

மண்பானையில் பொங்கல் இடும் கலாச்சாரம் மறைந்து குக்கரில் பொங்கல் வைக்கும் நிகழ்வு வந்து விட்டது. எங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மண்பானை வாங்கி பொங்கல் வைப்பதற்கும் அரசு விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மண் பானை தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம், பூளவாடி, பூக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழா்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போது உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள கால்நடைகள் மற்றும் சூரியபகவானுக்கு பச்சரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தமிழா்களின் மரபாகும்.



பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானைகள் உற்பத்தி பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மந்தமான வானிலை நிலவுவதால் பானைகளை காயவைத்து பக்குவப்படுத்தி வடிவமைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பள்ளபாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட உற்பத்தியாளர் குப்புசாமி கூறுகையில்,பல்வேறு விதமான வடிவங்களில் பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றோம். முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கலிடுவது வழக்கம். இதனால் தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம்.

ஆனால் மண்பானையில் பொங்கல் இடும் கலாச்சாரம் மறைந்து குக்கரில் பொங்கல் வைக்கும் நிகழ்வு வந்து விட்டது. எங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மண்பானை வாங்கி பொங்கல் வைப்பதற்கும் அரசு விழிப்புணர்வு செய்ய வேண்டும், நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பாணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மண் பானையில் தயாராகும் பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். தற்போது அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண்பானை ரூ 100 க்கும் ஒரு கிலோ கொள்ள கொண்ட பானை ரூ.150 க்கும் விற்பனை செய்கின்றோம். இவ்வாறு தெரிவித்தார்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...