கோவையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அறை திறப்பு விழா

நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர் D 6, கரும்பு கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும்பு கடை சாரமேடு பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கண்காணிப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



மேலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அவர் கூறுகையில். காவல்துறையினருக்கு ஒரு சிறந்த நல்வழிகாட்டியாக இருப்பது சிசிடிவி காட்சிகள். நடந்ததை நான்கு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவதை விட, நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக இந்த சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என்றார்.

தொடர்ந்து இன்று 12 கேமரா பொருத்த பட்டு அதனை கண்காணிப்பு செய்யும் அறையை திறந்து வைப்பது, குற்றங்களை முழுமையாக தடுப்பதாக நான் கருதுகிறேன் என்றார். மேலும், செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்டவைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இது மாதிரியான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு முக்கிய நண்பனாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கரும்புகடை பகுதியின் கவுன்சிலர் அஹ்மத் கபீர், கரும்புகடை பகுதி காவல் ஆய்வாளர் தங்கம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும், தெற்கு உதவி ஆணையர் வீரபாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...