மாணவர்களின் திறமையை கண்டறியும் வகையில் சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் காட் டேலண்ட் ஷோ

போட்டியில் தனி நடனம், குழு நடனம், பாட்டுப்போட்டி, சிலம்பம் போட்டி, பரதநாட்டியம், இசைப்போட்டி, பறை இசை போட்டி, யோகா போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.


கோவை: கோயம்புத்தூர் விழா 2024 பதினாறாவது பதிப்பு ஜனவரி 2ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை கோவையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறியும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ மூலம் மாணவர்களின் திறமைகளை கண்டறியும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோயம்புத்தூர் காட் டெலண்ட் ஷோ 2024 என்னும் மாணவர்களின் திறமைகளுக்கான போட்டிகள் நேற்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்டத்தில் இருந்து நூறுக்கும்க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தனி நடனம், குழு நடனம், பாட்டுப்போட்டி, சிலம்பம் போட்டி, பரதநாட்டியம், இசைப்போட்டி, பறை இசை போட்டி, யோகா போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளை நடுவர்கள் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024 ஆம் ஆண்டிற்கான பட்டத்தினை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...