ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் 1.40 லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 1950 கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது,



கடந்த 2023 ல் கோவை மாவட்ட காவல் துறை சார்பில் லைப் கார்டு, பள்ளிக்கூடம் 2.0, மிஷன் கல்லூரி, அதிநவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை என பல்வேறு திட்டங்களை துவங்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் விழுந்து சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் கடந்த 2023 பிப்வரி மாதம் "லைப் கார்டு" என்ற பெயரில் மாவட்ட காவல் துறை சார்பில் 10 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2023 ல் மட்டும் ஆற்றில் தவறி விழுந்த 700 பேரை காப்பாற்றியுள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற 11 பேரை தடுத்து காப்பாற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் 1.40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். 35 பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 1950 கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 449 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 590 கைது செய்யப்பட்டு 742 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் மட்டும் 189 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் 74 கடைகள் அகற்றப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 120 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 47 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 கொலைகள் ஆதாய கொலை, இந்த வழக்குகளில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 சதவீதம் வழக்குகளில் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்குகளில் 89 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். அதிகபட்சம் 3 நாட்களில் கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 1558 பேருக்கு பிணையில் வெளிவராத வாரண்ட் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளோம். இந்த ஆண்டு விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்துள்ளது. சைபர் கிரைம் மூலம் ரூ.24 கோடி யை பொதுமக்கள் இழந்துள்ளனர். மர்ம நபர்களின் வங்கி கணக்கில் இருந்த 31 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளில் நடத்தும் விழிப்புனர்வு நிகழ்சி மூலம் 15 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ரூ,4.5 கோடி அபராதம் விதிக்கபட்டுள்ளது. மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க காவல் துறை சார்பில் விரைவில் மின் அறிவிப்பு இயந்தரம் பொருத்த உள்ளதாகவும், தற்போது கண்டறியப்பட்டுள்ள 19 இடத்தில் இந்த கருவிகளை பொருத்தி பவானி ஆற்றில் நீர் திறக்கும் போது முன்கூட்டிய அலாரம் ஒளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பவானி ஆற்றக்கரையில் மீட்பு பணிகாக போடப்பட்ட போலீஸாருக்கு சிறப்பு நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...