பெரியநாயக்கன்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி நகர்பு புற வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



முகாமிற்கு பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் விஸ்வ பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், கோவை மாவட்ட பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், செயல் அலுவலர் நந்தகுமார், துணைத் தலைவர் உமாதேவி பழனிச்சாமி, துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி நகர்பு புற வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,காவல்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.



மேலும் மாற்றுத்திறனாளி ஒருவரின் மனுவை அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பேரூராட்சித் தலைவர் விஸ்வபிரகாஷ் பெற்றுக்கொண்டார். இதில் கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், அம்பிகா பால்ராஜ், கமலவேணி, சிவராஜ், பிரகாஷ், ரங்கசாமி, சௌந்தர்யா, பிரதீப் கந்தசாமி, ஜனனிஉமாபதி, சந்தோஷ் குமார், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...