தெலுங்குபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் வாக்கத்தான்

வாக்கத்தான் நிகழ்ச்சியை காவல் உதவி ஆய்வாளர் பரமன் மற்றும் துணை முதன்மை போக்குவரத்து காப்பாளர் ரங்கபிரபு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்பினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே இந்த ஆண்டு முதல் மாதத்தில் இருந்து அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த உறுதி மொழி ஏற்று வாக்கத்தான் விழிப்புணர்வை இன்று ஏற்படுத்தினர்.



இந்த வாக்க்கதான் நிகழ்ச்சியை காவல் உதவி ஆய்வாளர் பரமன் மற்றும் துணை முதன்மை போக்குவரத்து காப்பாளர் ரங்கபிரபு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



வாக்கத்தான் நிகழ்ச்சியில் கட்டாயம் ஹெல்மெட் அணிவது, விபத்து எதிர்பாராத அழிவு, பாதுகாப்பு என்பது வருமுன் காக்கும் செயல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். தொடர்ந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பாடல்களுக்கு நடனமாடியும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...