இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல் ஆகியவை குறித்து பள்ளி மேலாண்மை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி வருடத்தின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.



அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்‌. பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியங்கா முன்னிலை வைத்தார்.

கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பள்ளி வளாகம் மிளிரும் பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சார்பாக கலந்துரையாடப்பட்டது.



பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல், அது சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோல பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேறொரு நாளில் பணி வழங்குதல் குறித்த அரசாணைகள் ஆகியவற்றை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்த காணொளிகள் திரையிடப்பட்டன. நிறைவாக இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர் கோகுல பிரியா நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...