வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, செயல் திறனைப் பகிர்ந்து கொள்ளுதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் இணைந்து செயல்படுவது என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திராவில் அமைந்துள்ள முனைவர் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.01.2024 அன்று கோவையில் கையெழுத்தானது.

ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகமானது தோட்டக்கலையில் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றை திறம்பட நடத்திச் செல்லும் ஒரு அரசு பல்கலைக்கழகமாகும். தோட்டக்கலை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பண்பகப்பண்ணையின் விதைகள், தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் ஆராய்ச்சிமுறை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, செயல் திறனைப் பகிர்ந்து கொள்ளுதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் இணைந்து செயல்படுவது மற்றும் இதர அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி இந்த ஒப்பந்தம் உருவாக பெரிதும் துணைநின்றார். ஒய். எஸ். ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் டி.ஜானகிராம் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பி.சீனிவாசலு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பெ.ஐரின் வேதமணி அவர்கள் இந்த ஒப்பந்தம் உருவாக அடித்தளமிட்டு செயல்படுத்தினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இயக்குனரத்தின் முதல்வர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...