காங்கேயம் சந்தை முன்பக்க கேட் பூட்டப்பட்டதால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

சந்தையின் கேட்டை திறக்கவில்லை என்றால் நகராட்சி முன்பும், காவல் நிலையம் முன்பும் காய்கறிகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சந்தை வளாகத்தில் உட்புறமாக உழவர் சந்தை செயல்படுகின்றது. சந்தை பேட்டை குடிகாரர்களின் கூடாரமாக மாறிவருவதற்கு தடை போடவேண்டும் என நினைத்த நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் சந்தை கேட்டை பூட்டி வைத்துள்ளனர்.

இதனால் தினசரி அதிகாலை முதலே விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்யும் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் வருவது இல்லை. இதனால் பல லட்சம் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் வீணாகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த செயல் எலிக்கு பயந்து வீட்டை தீ வைத்து கொளுத்தியது போல் உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். காங்கேயத்தில் தினசரி வியாபாரிகளால் தினசரி மார்க்கெட் நடைபெற்று வருகிறது.



மேலும் சந்தை வளாகத்தின் உட்பகுதியிலேயே உழவர் சந்தை நடைபெற்று வருகின்றது. இதில் காங்கேயம் பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை அங்கு வந்துவிற்பனை செய்கின்றனர். தூய்மையாகவும், அன்று அன்றைக்கு தேவை படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உட்பட ஏராளமான பொருட்களை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கே கொண்டு வந்து கடைகளுக்கு மொத்தமாகவும் பொதுமக்களுக்கு நியாவிலையிலும் விற்பனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இதே பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் செயல்பட்டு வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையில் வாங்கும் மதுக்களை மதுபிரியர்கள் சந்தை வளாகத்தில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் சந்தை பகுதியிலேயே கிளை நூலகம் செயல்படுகின்றது. இங்கு வரும் மாணவ, மாணவிகள், பெண்களிடம் மதுபிரியர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் சந்தையின் முன் பகுதி கேட்டை பூட்டிவிட்டனர். உழவர் சந்தைக்கு மார்க்கெட் வழியாக சென்று மற்றொரு வழியில் வரும்படி கூறிவிட்டனர். இந்த தடம் விவசாயிகளுக்கு தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு பரிச்சயம் இல்லை. இதனால், பல லட்சம் ரூபாய் காய்கறிகள் கடந்த 4 நாட்களில் வீணாவதாக தெரிவித்தனர். மேலும் உழவர் சந்தை பயன்படுத்தும் விவசாயிகள் சந்தையின் கேட்டை திறக்கவில்லை என்றால் நகராட்சி முன்பும் காவல் நிலையம் முன்பும் காய்கறிகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மதியம் 12 மணிக்கு திறக்கவேண்டிய டாஸ்மாக் கடை முறைகேடாக அதிகாலை முதலே விற்பனை செய்வதும், அங்கு மதுக்களை வாங்கிய மதுபிரியர்கள் சந்தை வளாகத்தில் குடித்து ரகளையில் ஈடுபடுவதை தடுக்க முடியாத நகராட்சி நிர்வாகமும் மற்றும் காவல்துறையும் சந்தையின் முன் பக்க கேட்டை பூட்டி வைத்துள்ளது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். எலிக்கு பயந்து கொண்டு வீட்டிற்கு தீ வைத்தது போல் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...