காங்கேயம் மற்றும் ஊதியூர் பகுதிகளில் ஒரேநாளில் நான்கு கோயில்களில் தங்க நகைகள் கொள்ளை

கொத்தனூரில் ஒரே காம்பவுண்டில் உள்ள இரண்டு கோயில்களின் முன்பக்க கதவில் உள்ள பூட்டை உடைத்தும், வலசு பகுதியில் உள்ள கோவிலின் கதவுகளை உடைத்தும் மர்ம நபர்கள் சாமியின் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே கொத்தனூரிலுள்ள மகா மாரியம்மன் கோவில் மற்றும் மாகாளியம்மன் கோவில் வளாகம், வலசு பாளையம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் ஆகிய‌ மூன்று கோவில்களின் உள்ள கதவின் பூட்டை உடைத்து சாமியின் தங்கமாங்கல்யம் -2, மாங்கல்ய பொட்டு -4 மொத்தம் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொத்தனூர் மற்றும் வலசு பாளையம் ஊர் பொதுமக்களுக்கு சொந்தமான மூன்று தனியார் கோவிகளில் நேற்று காலை சுமார் 6 மணி அளவில் கோவில் பூஜைகளை முடித்து பூட்டிவிட்டு இன்று காலை கோவிலுக்கு அந்தந்த கோவிலின் பூசாரிகள் சிதம்பரம், லோகநாதன் ஆகியோர் காலை பூஜைக்காக கோவிலுக்கு வந்துள்ளனர்.



அப்பொழுது கொத்தனூரில் ஒரே காம்பவுண்டில் உள்ள இரண்டு கோயில்களின் முன்பக்க கதவில் உள்ள பூட்டை உடைத்தும், வலசு பகுதியில் உள்ள கோவிலின் கதவுகளை உடைத்தும் அடையாளம் தெரியாத நபர்கள் கோவில் சாமியின் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கண்டுள்ளனர்.



இதனை அடுத்து அந்தந்த கோவிலுக்கு சொந்தமான ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்களும் கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். பின்னர் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.‌



அவர்கள் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காங்கேயம் வீரணம்பாளையம் ஊராட்சி பூவாநல்லூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மற்றும் பூவாநல்லூர் காலனியில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய கோவிலின் பூட்டை உடைத்து மாங்கல்ய பொட்டு மற்றும் கோவில் முன் உள்ள உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுள்ளனர். காங்கேயம் பகுதியில் உள்ள கோவில்களில் ஒரே நாளில் நன்கு இடத்தில் கொள்ளை போனது காங்கேயம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...