பல்லடம் அருகே கேத்தனூரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்

பல்லடம் அருகே கேத்தனூரில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையம் பிரிவில் எல்.எம் பள்ளி நடத்திய இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



கேத்தனூரில் தொடங்கி குள்ளம்பாளையம் வரை 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



பள்ளியின் தாளாளர் பாப்பாள், முதல்வர் சபீனா பர்வீன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு மற்றும் காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ரவி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

போட்டிக்குப் பிறகு, காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் செல்போன் மோகம் குறைக்குமாறும், அனைத்து வீடுகளிலும் சிசிடிவி பொருத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...