சபரிமலை போகவே பயமா இருக்கு - சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து கவலை

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், கூடுதலான கூட்டம் மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் பயணம் செல்வதில் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கமாகும். இந்த ஆண்டு சபரிமலையில் அதிகளவில் கூட்டம் மற்றும் நெரிசல் இருப்பதால் தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் சபரிமலை செல்வதற்கு முன்னோட்டமாக இருமுடி கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 55 ஆண்டுகளாக ஐயப்பன் கோவில் சென்று வந்த பக்தர்கள், இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்லாமல் குளத்துப்புழை கோவிலுக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர்.



சபரிமலையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் மேற்கொள்ளவும், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும், உணவு மற்றும் நீர் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுவதாலும் பயணம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதால், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றுசேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு பக்தர்களுக்கு உரிய வழிகாட்டுதலுடன் அனுப்ப வேண்டும் என்றும் ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...