நஞ்சியம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற ஆண் மான் பலி

ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு கூட்டம், கூட்டமாக சாலையை கடக்க முயலும் மான்கள் சில சமயங்களில் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நஞ்சியம்பாளையம். ஊதியூர் மலைப்பகுதியில் காடுகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஊதியூர் மலையில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு மான்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வந்து கொண்டுள்ளது.



மேலும் தற்போது தாராபுரம் அருகில் நஞ்சியம்பாளையம் என்ற இடத்தில் தண்ணீர் தேவைக்காகவும், உணவு தேவைக்காகவும் காடுகளில் மேய்ந்து கொண்டு இருந்த மான்கள் சாலையை கடக்கும் போது, மூன்று மான்களில் ஒரு மான் மட்டும் எதிர்பாராதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூறுகையில் இந்த பலியான மானுக்கு இரண்டு வயது இருக்கும், எனவும் இது ஆன் மான் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...