பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி வெற்றி

கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கூடை பந்தாட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக நேஷனல் கூடை பந்தாட்ட கழகம் சார்பில், தாக்கூர் கோப்பை 26 ஆவது மாநில அளவிலான கூடை பந்து போட்டி பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 3ம் தேதி புதன் கிழமை தொடங்கியது.

இதில் சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கு பெற்று விளையாடின.



நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றது.



விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்ற கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...