வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, பேருந்துகளை பராமரித்து தருதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், தோட்ட தொழிலாளர் மாநில தலைவர் v.அமீது, மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, போக்குவரத்து துறையில் பணி நியமனம், பேருந்துகளை பராமரித்து தருதல், புதிய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு,போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை அரசு செய்து தர வேண்டும் என்றும், செய்து தரவில்லை என்றால் வருகிற 9ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...