சுகாதார துறையில் அரசின் பங்கை அதிகரிக்குமாறு கோவையில் இந்திய மருத்துவ சங்க தேசிய செயலாளர் பேட்டி

ஜனவரி 12 ம் தேதி நடைபெறும் முக்கிய கூட்டத்தில், சுகாதார துறை குறித்த இரு சுகாதாரத்துக்கான உறுதிமொழியை அரசுக்கு வழங்க உள்ளதாக இந்திய மருத்துவ சங்க தேசிய செயலாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.


கோவை: இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது.



அதன்பின்பு செய்தியாளர்களிடம் இந்திய மருத்துவ சங்க தேசியத் தலைவர் அசோகன் கூறியதாவது, இந்திய மருத்துவ சங்கம், கடந்த, 1928 ம் ஆண்டு துவங்கப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் டாக்டர்களை ஈடுபடுத்த உருவாக்கப்பட்ட சங்கம் இது. வரும் ஜன., 12 ம் தேதி எங்களது முக்கிய கூட்டம் நடக்க உள்ளது.

அதில், சுகாதார துறை குறித்த இரு சுகாதாரத்துக்கான உறுதிமொழியை அரசுக்கு வழங்க உள்ளோம். சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் அரசின் பங்கை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதாரம் குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். அரசியல் கட்சியினருக்கு இதுகுறித்து எடுத்துக்கூற உள்ளோம்.

ஆண்டுதோறும் சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதம் சுகாதாரத்தின் பங்கு உள்ளது. இதில், அனைத்து அரசுகளும் சேர்ந்து, 1.1 சதவீதமும், தனியார் மருத்துவமனைகள் 2.9 சதவீதம் பங்களிக்கின்றன.

அரசு பங்களிப்பு 2.5 சதவீதம் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதற்கேற்றார் போல் அரசு சுகாதார துறைக்கு தேவையான உட்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும். மருத்துவ தவறுகளை அரசு கிரிமினல் குற்றங்களாக பார்க்கிறது. இதை சிவில் குற்றமாக பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு தனிச்சட்டம் கொண்டு வரும் போது டாக்டர்கள் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பி.என்.எஸ் எனும் சட்டம் முறை கொண்டு வரும் போது கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து டாக்டர்கள் விடுவிக்கப்பட வேண்டும். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால், நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதை அரசிடம் தெரிவித்த போது மத்திய அரசு அதற்கு தீர்வு கண்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளுக்கும் வரையறை கொண்டு வரப்பட வேண்டும்.

மருத்துவமனைகள் நிறுவன சட்டத்தில் உள்ள விதி, 5 உட்பிரிவு, 2 ‘ஏ’ சட்டத்தை நீக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இன்சூரன்ஸ் குறித்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. மருத்துவமனைகள், டாக்டர்கள் பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவமனைகள் உள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காலத்தில் 1800 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை இழப்பீடு தரவில்லை என வேதனை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...