பொள்ளாச்சி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அப்புறப்படுத்த கோரி சாலை மறியல்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியங்களை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆகியோர் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சின்னம்பாளையம், மாக்கினாம்பட்டி, சோலபாளையம் ஊஞ்சவாலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் கிராமங்களுக்கு செல்வதற்கு வழித்தடங்கள் இருந்தது. இந்தநிலையில் திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியங்களை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



எனவே சென்டர் மீடியங்களை அப்புறப்படுத்த கோரி திடீரென உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை திடீரென அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் அடைத்ததால் பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகளால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நான்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சென்டர் மீடியங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



இந்த போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...