மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மேட்டுப்பாளையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் காரியம் செய்தனர்

நரசிம்மநாயக்கன்பாளையம் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு தீபம் காட்டி மாலைகள் சூடி மலர்கள் தூவி மரியாதை செய்தனர். அதன்பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: தேமுதிக தலைவரும், சினிமா நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து 11 நாட்களாகிறது.



இதற்காக தேமுதிக கோவை வடக்கு மாவட்டம் சார்பாக அவருக்கு மேட்டுப்பாளையத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் சன்முகவடிவேல் தலைமையில் அவர் உட்பட 11 கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து பவானி ஆற்றில் குளித்துவிட்டு 11ம் நாள் காரியங்கள் செய்தனர்.



அதனையடுத்து நரசிம்மநாயக்கன்பாளையம் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு தீபம் காட்டி மாலைகள் சூடி மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.



அதன்பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் அசோகபுரம் ஊராட்சியில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி, மெளன அஞ்சலி மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.சக்கையா செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கேப்டனுக்கு மலர் மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சண்முகசுந்தரம். பி.ஜே.பி ஒன்றிய தலைவர் புவனேஷ்குமார், கார்த்திக், இந்து முன்ணனி தியாகராஜன், அ.மு.மு.க நிர்வாகி முத்துவடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...