பல்லடம் பணிமனையில் இருந்து 90 சதவீத பேருந்துகள் இயக்கம் - 17 பேருந்துகள் மட்டும் நிறுத்தம்

பல்லடம் பணிமனையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என சுமார் 520 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 18 சங்கங்கள் பங்கேற்றுள்ளன.


திருப்பூர்: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணம், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 96 மாத அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.



அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிமனையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என சுமார் 520 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 18 சங்கங்கள் பங்கேற்றுள்ள நிலையில் பல்லடம் பேருந்து பணிமனையில் இருந்து இயங்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் 78 பேருந்துகளில் 57 பேருந்துகள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை வைத்து இயக்கப்பட்டு வருவதாகவும், 17 பேருந்துகள் மட்டும் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பல்லடம் பணிமனையில் இருந்து சுமார் 90% பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுவதாகவும் பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளார்.



மேலும் பல்லடத்தில் இருந்து திருப்பூர், கோவை, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பனியன் தொழிலாளர்கள் சிரமம் இன்றி பயணம் செய்கின்றனர்.

மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவது ஒட்டி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து தங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...