திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பணிமனையில் இருந்து 90 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


திருப்பூர்: போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பணிமலையிலிருந்து 90 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தது.



இந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து தாராபுரம் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...