உடுமலையில் வழக்கம் போல் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று அண்ணா தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உடுமலை போக்குவரத்து பணிமனையில் இயக்கப்பட்டு வரும் 94 கிராமம் மற்றும் புறநகர் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.



மேலும் பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.



இருப்பினும் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...