குடிமங்கலத்தில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி. சட்டமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று திமுகவினர் வெற்றி பெற்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: உடுமலையில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அம்மாபட்டி துரைசாமி ஏற்பாட்டில், ஆமந்தகடவு ஊராட்சி முன்னாள் திமுக தலைவர் சிவகாமி, குடிமங்கலம் ஒன்றிய குழு திமுக கவுன்சிலர் செல்வராஜ், தேமுதிக முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிஷ், திமுகவைச் சேர்ந்த கௌதம், பிரகாஷ், கார்த்திக்குமார், உட்பட மதிமுக, பாஜக, பாமக கொங்குநாடு முன்னேற்ற கழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.



பின்னர் கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உடுமலை தொகுதியில் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் குடியிருப்பு வசதி வாரியம் மூலம் வீடுகள் மற்றும் உடுமலையில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் என கூறி திமுகவினர் புறக்கணித்து வருகின்றனர்.

மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி. சட்டமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று திமுகவினர் வெற்றி பெற்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தற்சமயம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் தினமும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.

இந்த விழாவில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட துணை துணைச் செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், முருகேசன், பிரேனஷ், பெரிய கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜாகிர் உசேன் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...