உடுமலை அருகே திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 34-வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு

மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், யோகா, தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழாவில் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து, பின்னர் குரு மகானிடம் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் தென்கயிலை உலக சமாதான ஆலயம் உள்ளது. உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம சமத்துவ நல்லாட்சி உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக நிறைவு பெற 34-வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி கடந்த மாதம் 17- ம் தேதி தொடங்கியது.

குரு மகான் பிரமிடு வடிவிலான அறையில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வி மேற்கொண்டார். வேள்வியின் நிறைவு விழா நடைபெற்றது. குருமகான் பிரவணாலயத்தில் இருந்து வெளியில் வந்தார். அதைத் தொடர்ந்து ஒரு நிமிட அமைதி, அஷ்ட தீபம் ஏற்றுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. உலக சமாதான அறக்கட்டளை பொதுச்செயலாளர் கே.எஸ்.சுந்தரராமன் வரவேற்புரை ஆற்றினார்.

குருமகா பீடாதிபதி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை உரையாற்றினார். பொள்ளாச்சி தொகுதி எம்.பி கு.சண்முகசுந்தரம் முன்னிலை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பிரபஞ்ச நல வாழ்த்து, உலக அமைதிக்கான ஒரு நிமிட அமைதியும் நடைபெற்றது.

பின்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதி எ.எ.நக்கீரன் சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து குருமகான் அருளுரை வழங்கினார்.



அத்துடன் மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், யோகா, தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் குரு மகானிடம் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உலக சமாதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...