பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு

சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொங்கல் பண்டிகை யொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேவல் சண்டைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சேவல் இல்லாமல் சென்று விவசாயிகள் சென்று சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க மனு அளித்தனர். மனித உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, விவசாயிகள் ஒன்றுமையுடன் விளையாட கூடிய சேவல் சண்டைக்கு அனுமதி வழங்காதது கண்டிக்கதக்கது. மேலும் கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும், தேங்காய்க்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...