கோவை–சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே 300 கிலோ ரேசன் அரிசி கடத்தியவர் கைது

பாலக்காடு மாவட்டம் கொடும்பு, சென்னம் கொடுவை சேர்ந்த, சிவதாசன் என்பவர், எஸ்.ஐ. எச்.எஸ்.காலனி, ‘நீலி கோணாம்பாளையம் பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரசி வாங்கி கேரளாவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் நேற்று கோவை–சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வாகனத்தை ஓட்டி வந்த அரிசி மற்றும் வாகன உரிமையாளரான பாலக்காடு மாவட்டம் கொடும்பு, சென்னம் கொடுவை சேர்ந்த, சிவதாசன் (வயது 45) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அந்த ரேஷன் அரிசியை எஸ்.ஐ. எச்.எஸ்.காலனி, ‘நீலி கோணாம் பாளையம் பகுதி பொதுமக்களிடம குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கொடும்பு பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதன் பேரில் அவரை கைது செய்தனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...