உடுமலை அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

கல்லாபுரம், ருத்ராபாளையம், கொழுமம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தளூர், தூவானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து 4400 கன அடி வந்த நிலையில் அணை நிரம்பியது.



இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணையின் பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 5,400 கன அடி உபரி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றது.



தற்சமயம் மொத்த 90 அடியில் 89.24 அடியாக உள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அமராவதி அணையில் கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ரா பாளையம், கொழுமம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...