உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கலை வரவேற்கும் விதமாக சலகெருது, தேவராட்டம் ஆடிக் கொண்டாட்டம்

பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வழிபாடு நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான பெதம்பம்பட்டி, எஸ்.அம்மாபட்டி, லிங்கமாவூர், கொங்கல்நகரம் புதூர், பொட்டயம்பாளையம், சனுப்பட்டி, வல்லகுண்டபுரம், மரிக்கந்தை, கொங்கலகுறிச்சி, வாளவாடி உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் கிராம மக்கள் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதங்களில் இரவு நேரங்களில் காளைகளுடன் சல கெருது, தேவராட்டம் ஆடி வருகின்றனர்.



மேலும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சலகெருது மறித்தல் எணும் விளையாட்டை ஆடுவார்கள்.



குச்சிகளை நீட்டினால் காளைகள் முட்ட வரும்.



குச்சிகளை குறுக்கே வைத்தால் காளைகள் நிற்கவும் பழக்கி ஆடும் இந்த ஆட்டதோடு இல்லாமல் உருமி இசைகருவி முழுங்க தேவராட்டம், இரட்டையர் தேவாராட்டம் ஆண்கள் ஆடுவார்கள்.



மேலும் பாரம்பரியமான பாடல்களுக்கு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடையும் தங்களது மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.

பொங்கலுக்கு முன்பு காளைகளுக்கு படையல் செய்து அவற்றை காளைகள் உண்ட பின்பே பொங்கலை கொண்டாட தொடங்கும் கிராமத்தினர் மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டுவார்கள்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் காலம் காலமாக இந்த நிகழ்வு தொடர்ந்து வருவதாக கூறும் கிராமத்தினர், கால்நடைகளை தெய்வம் ஆக கருதி வருகிறோம் என்றனர். ஒற்றுமையை வளர்கவும், கொட்டும் பணியை விரட்டவும் சிறந்த உடற்பயிற்சியாகவும் ஆடும் இந்த சலகெருது மறித்தல், தேவராட்டம் உள்ளிட்டவை விவசாயமும், கால்நடை வளர்ப்புமே பிரதானமாக இருந்த காலத்தில் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தில் இரவு தொடங்கி பொங்கல் வரை நள்ளிரவு வரை நிகழ்த்தப்பட்டு வருகிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...