பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பணியாற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி தமிழக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...