துடியலூர் அருகே சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

புதுப்பானையில் பொங்கல் வைத்தும், அம்மி அரைத்தும், கயிறு இழுத்தும், உரி அடித்தும், சிலம்பம் சுற்றியும், பறை இசைத்தும், கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.



கல்லூரி வளாகத்தில் வண்ணக்கோலமிட்டு, முளைப்பாரி வைத்து, புதுப்பானையில் பச்சரிசியிட்டு அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கல் வைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.



மேலும் பசு மாட்டிற்கு கற்பூரம் காட்டி பழம் வழங்கினர்.



தொடர்ந்து பாரம்பரிய உடையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதில் மாணவிகள் அம்மி அரைத்தும், ஆசிரியைகள் மாணவிகள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டிகள், உரியடித்தல், சிலம்பம், மெதுவாக சைக்கிள் ஒட்டுதல், பறை இசைத்தல் எனபல்வேறு போட்டிகள் நடத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...