உடுமலை சீனிவாசா ஆஞ்சநேயர் பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளபட்டு சிறப்பு வழிபாடு செய்யபட்டது. பின்னர், ஆஞ்சநேயர் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள புகழ்ப்பெற்ற அருள்மிகு சீனிவாசன் ஆஞ்சநேய பெருமாள் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்ச நேயருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளபட்டு சிறப்பு வழிபாடு செய்யபட்டது.

ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதே போல பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...