கோவையில் மயில் குஞ்சை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த டீக்கடை ஊழியர்

பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள டீக்கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இன்று காலை பெண் மயில் ஒன்று தனது சேயுடன் உலா வந்தது. அப்போது மயில் குஞ்சை அப்பகுதியில் உலா வந்த பருந்து ஒன்று தூக்கிச் செல்ல முயன்றது. இதனை பார்த்த தாய் மயில் உடனடியாக பாய்ந்து தனது குட்டியை தூக்கிச் செல்ல முயன்ற பருந்தை விரட்டி அடித்தது.



இதனிடையே பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள தேனீர் கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.



பின் அந்த மயில் குஞ்சை வளர்த்து வனப்பகுதியில் விடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...