கோவை - ஜபல்பூர் இடையிலான வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

ஜனவரி 12 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரில் புறப்படும் ஜபல்பூா்-கோவை சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை-ஜபல்பூா் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 12 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரில் புறப்படும் ஜபல்பூா்-கோவை சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை திங்கள்கிழமை மாலை 5.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - ஜபல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 02197) புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில் பாலக்காடு, ஷோரணூா், மங்களூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...