கோட்டைமேடு கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா - பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள் நெய் விளக்கேற்றி அனுமன் உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வசப்பட்ட கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோட்டைமேடு கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. வேறு எங்கும் இல்லாதபடி இங்கு மார்கழி மாதத்தில் வரும் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி அனுமன் உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடினர்.



மா மற்றும் இலை பூ மாலை சூட்டப்பட்டு வெண்ணை காப்பு சாற்றப்பட்டது.

பூஜைகளை கோவில் பட்டாசிரியர்கள் செய்தனர்.



பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று காடு அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் செந்தில்குமார், திமுக அவை தலைவர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...