திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் சட்டமன்ற கூடுதல் செயலாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரல்

நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜை கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.



அப்போது சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதனால் கோபமடைந்த திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ செல்வராஜ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தன்னை மன்னித்து விடுமாறு சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், திமுக எம்எல்ஏவிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த மன்னிப்பு கேட்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் MLA அவர்களை உரையாற்ற அழைத்தபோது பேசுவதற்கு விருப்பமில்லை என்று கோபித்துக் கொண்டு மேடையின் பின்புறமாக வேக வேகமாக கிளம்பி சென்றுவிட்டார்.

நான் மேடைக்கு வரவில்லை. பேசவும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.



அதன் பின்பு அரசு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்து பின்னர் உரையாற்றினர்.



இந்த சம்பவம் கருத்தரமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க கூடிய அளவில் இருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...