துடியலூரில் அனுமனின் திருவீதி உலாவை வரவேற்று முஸ்லீம் மதத்தினர் இனிப்பு வழங்கினர்

அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் கொடுத்து சிறப்பித்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலகலமாக நடைபெற்றது. மாலை ஆஞ்சநேயர் திருவீதி உலா விஸ்வநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



அப்போது, அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் வழங்கி சிறப்பித்தனர்.

இதில், அனுமன் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.



இது விழா குழுவினர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதில் துடியலூர் பள்ளிவாசல் தலைவர் சுல்தான், துணைத்தலைவர் ஷேக் பாவா மகபூப், செயலாளர் அமீர் அப்பாஸ் மற்றும் நிர்வாகத்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கு பெற்றனர். இப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு இதுஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...