கோவையில் உள்ள பார்க் கல்வி குழுமத்தில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கும்மி போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை தான். கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்விக் குழுமத்தின் வளாகத்தில் ஜனவரி 12 அன்று பொங்கல் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



2000 மாணவர்கள் மற்றும் 300 ஆசிரியர்கள் பங்குபெற்று கொண்டாடிய பெரிய திருவிழாவாக இருந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து பொங்கல் வைத்து கடவுளை வணங்கினார்கள். நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கும்மி போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

உறியடித்தல், பம்பரம், துப்பாக்கி சுடுதல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டிய டாக்டர் அனுஷா ரவி அவர்கள், உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், தனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள் ஆகும். ஆகவே, விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்போம், இயற்கையை காப்போம் என்று அறிவுறுத்தினார்.



பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கெடுத்த அனைவருக்கும் அறுசுவையான பொங்கல் விருந்து விநியோகிக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...