தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-திருப்பூர் சாலையில் தனியார் கலை மற்றும் அறிவியல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில், மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்திருந்தனர்.

பசியைப் போக்கும் விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கரும்பு மற்றும் மண் பானையில் பொங்கலிட்டு வணங்கினர்.



இதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள், வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து கோலமிட்டு மாணவிகள் அசத்தினர்.



கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உறியடித்தல் போன்ற போட்டிகளும், கும்மியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற இசை நிகழ்ச்சிகளும் கோலகலமாக நடைபெற்றது.



விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...