கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு புதிய திட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


கோவை: கோவை மாவட்டம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நல்லாம்பள்ளி பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



அங்கு குடிநீர், சாலை, மற்றும் அடிப்படை தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.



மு.பெ. சாமிநாதன் பேட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் குறிப்பிட்டது போல, மேல்நிலை தொட்டிகள், மின்மோட்டார்கள், நீறேற்று நிலையங்களின் பராமரிப்பு பணிக ள் மற்றும் புதிய திட்டங்களுக்கு போதுமான நிதியை கோரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இவை நடவடிக்கைக்கு வரும் என்று தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் 31 ஊராட்சிகள், மூன்று பேரூராட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், விவாதிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு அதிக நன்மை அளிக்கும் என நம்பப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...