கோவை சங்கனூரில் ரேஷன் கடை திடீரென மூடியதால் பொங்கல் பொருட்களை பெற முடியாமல் மக்கள் வருத்தம்

கோவை சங்கனூரில் உள்ள ஒரு ரேஷன் கடை திடீரென மூடியதால், மூன்று மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்காமல் விட்டது காரணமாக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அரசின் பொங்கல் பொருட்கள் வினியோக திட்டத்திற்காக தங்கள் பகுதியில் உள்ள உணவுப் பொருள் கடைக்கு மக்கள் சென்று பொருட்களை பெற்றுகொண்டனர்.



அவ்வாரு சங்கனூர் ரேஷன் கடை மூன்று மணி நேரம் காத்திருந்தும், கடை அதிகாரி திடீரென கடையை மூடி நேரம் முடிந்துவிட்டதாக கூறினார். வரிசையில் நின்ற சில மக்கள் மட்டுமே இருந்தனர், ஆனாலும் அவர்களுக்கும் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது.



மூடும் முன் அறிவிப்பை வெளியிடாமலும், கடையின் வேலை நேரத்தை பலகையில் எழுதாமலும் இருந்தனர். இதனால் பல வேலையை விட்டு மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.



பின்னர் கடையில் வேலை செய்த நபரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...