கோனேரிப்பட்டி பிரிவில் கருப்பு பொங்கல் வைத்து நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக நல்லதங்கள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு கேட்டு 151-நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் விவசாயிகளின் முக்கிய விழாக்களில் ஒன்றான பொங்கல் விழாவையொட்டி போராட்ட பந்தலில் இன்று கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி கூறும்போது, நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720-ஏக்கர் நிலம், சுமார் 120-பேரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக மானாவாரி பூமி ஏக்கர் ரூ.9,000, தோட்ட பூமி ஏக்கர் ரூ.27,000 வழங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

இது மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து, கூடுதல் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் விவசாயிகளின் மணுவை விசாரித்து முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் 20 ஆண்டுகள் கடந்தும் விவசாயிகளுக்கு உரிய முழு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் பொன்னிவாடி கிராமம் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் பந்தல் அமைத்து கடந்த 151, நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் முக்கிய நாளான பொங்கல் விழாவையொட்டி போராட்ட பந்தலில் நல்லதங்காள் ஓடை அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கருப்பு பொங்கல் வைத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிக்கிறோம் என இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...