சிங்கநல்லூரில் 72 பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் பகுதி-1 58 வது வார்டு, அண்ணா மன்றம் சார்பில், தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாளை முன்னிட்டு 72 பானைகளுடன் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.



பின்னர் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் இரா.கா.குமரேசன், வட்டக்கழகச் ‌செயலாளர்கள் தி.இளங்கோவன், ராஜேந்திரன், சுரேஷ் குமார், lpf சண்முகம், தென்னவர் செல்வம், கவுன்சிலர் சுமித்ரா தீபக்‌, சாந்தமணி கவுன்சிலர் பன்னீர்செல்வம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...