பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு

மாநிலம் முழுவதும் இருந்து 100 தனி நபர்கள், நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதுக்கு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்புக்காக 2021 - 22-ஆம் ஆண்டில் இருந்து பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து 100 தனி நபா்கள், நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தனி நபா்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டோர் தகுதியுடையவா்.

இவா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அது தொடா்பான துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பசுமை சாம்பியன் விருதுக்கு மதிப்பீடு செய்யப்படுவாா்கள். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, விழிப்புணா்வு, பாதுகாப்பு, புதிய பசுமைப் பொருள்கள், அது தொடா்பான ஆய்வுகள், நீடித்த நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் நிலை பாதுகாப்பு, நீா் சேமிப்பு, காற்று மாசு, பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல், மறுசுழற்சி உள்ளிட்ட பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும். இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தில் விருது வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் மூன்று பேருக்கு இந்த விருது வழங்கப்படும். விருது தொடா்பான விவரம், விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கோவை தெற்கு என்ற முகவரியை அணுகலாம். விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...