கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தபடி, மாட்டு வண்டி ஒட்டி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குடும்பத்தினர் ஒன்றாக கலந்து கொண்ட இந்த விழாவில் அனைவரும் கூட்டாக இணைந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.



இந்த பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வேட்டி சட்டை அணிந்தபடி மாட்டு வண்டியை ஒட்டியபடி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என கூறி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த பொங்கல் விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் உட்பட பல்வேறு போட்டிகளும், பாரம்பரிய கலைகளான ஓயிரோட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.



இங்கு நடத்தப்பட்ட ஸ்லோ சைக்கிள் ரேஸில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வேட்டியை மடித்து கட்டியபடி கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினார். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளுடன் பொங்கல் விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் களை கட்டியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...