தாராபுரத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.



வண்ண வணண கோலங்கள் இட்டு, மண் பானையில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் வழங்கினார்கள். மேலும் பொங்கல் வைத்த மகளிர் அணியினரை உற்சாக படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...